Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் துறை: நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.8.47 லட்சம் கோடியாக உயர்வு..!

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (2013 ஏப்ரல் முதல் ஜூன்) இந்தியாவிலுள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 3.7 % அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.8.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக 5  காலாண்டுகளாக நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.

நீண்ட கால கடன் பத்திரம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களின் சொத்து மதிப்பு 31% அதிகரித்து ரூ.1.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசு கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யப்படும் கில்ட் ஃபண்ட்கள் சொத்து மதிப்பு 10% அதிகரித்து ரூ.8,600   கோடியாக உயர்ந்து ள்ளது.

அதேநேரத்தில், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்களின் முதலீட்டாளர்கள் அதிக தொகையை வெளியே எடுத்து உள்ளனர். இந்த திட்டங்களுக்காக நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 5% குறைந்து கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.1.99 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சிக் கண்டு வருவதால், தில் முதலீடு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் கோல்டு .டி.எஃப். எனப்படும் தங்க மியூச்சுவல் நிதி திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 11% குறைந்து ரூ.10,600 கோடியாக குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 24 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு அடிப்படையில் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் இரண்டாவது இடத்திலும் ஐ.சி..சி.. புருடென்ஷியல் ஃபண்ட் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ