Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவையில் வீட்டு மனை கண்காட்சி....!

இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) நடத்தும் வீட்டுமனை கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 2,3,4 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிற்து.

30க்கும் மேற்பட்ட கிரடாய்  உறுப்பினர்களால் கட்டப்பட்ட வீடுகள்  ரூ. 20லட்சம் முதல்  6 கோடி வரையிலான விலைகளில் கிடைகிறது..



இது பற்றி கிரடாய் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஸ்.பாலகிருஷ்ணன், இந்த கண்காட்சி நடக்கும் 3 நாட்களில் 10 000 பார்வையாளர்கள் வரை பங்கேற்பர்,, 2500 வீடுகள் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்பதாக கூறினார்.

 மேலும் ஆகஸ்ட் 31க்குள் அட்வான்ஸ் புக்கிங்க் செய்பவர்களுக்கு 3% விற்பனை தள்ளுபடி அளிக்கபடும் என்றார்..

வீடு வாங்குவது தொடர்பான வங்கி உதவிகள் பெரும் வகையில் வங்கிகளின் அரங்குகள்  இக்கண்காட்சியில் அமைந்துள்ளது..

இக்கண்காட்சியை பார்க்க வந்த மக்கள் அனைவரும் எண்ணற்ற நிறுவனங்களின் அரங்குகள் ஒரே இடத்தில் இருப்பதனால் வீடு வாங்குவது தொடர்பான சந்தேகங்கள் உடனடியாக போக்க முடிகிறது என்றும், வெவ்வேறு நிறுவனங்களின் வீட்டு விலை மதிப்பை ஒப்பீடு செய்வதற்கும் எளிதாக இருக்கிறது என்றனர்.

- டி. ஜெயபிரகாஷ்
மாணவ நிருபர் - கோவை
படம்: அ. ஜெஃப்ரி தேவ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ