Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுக்குமாடி குடியிருப்பு: சென்னை மக்களின் விருப்பம் என்ன?


சென்னை மற்றும் அதன் புற நகர்களில் அதிக எண்ணிக்கையில் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இதில், அதிகபட்சம் 5 மாடிகளை கொண்ட குடியிருப்புகளைதான் சென்னைவாசிகள் விரும்புவதாக சரே ஹோம்ஸ் (SARE Homes) -ன் முதன்மை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.

சரே ஹோம்ஸ் -ன் செயல் இயக்குநர் டேவிட் வாக்கர், '' சென்னையை பொறுத்தவரையில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவே பெரும்பாலோர் விரும்புகிறார்கள். அந்த வகையில் உடனடியாக குடிபோக கூடிய வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை பழைய மகாலிபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) திருப்போரூர் அருகே உருவாக்கி இருக்கிறோம். இங்கு ரூ, 27.5  லட்ச ரூபாய் முதல் ஃபிளாட்களை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் கேட்கும் அதிக வசதிகளையும் செய்து தருகிறோம்" என்றார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ