Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் - டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் !!

ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இ.எல்.எஸ்.எஸ். டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈக்விட்டியுடன் கூடிய வரி சேமிப்பு திட்டமான இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் 1961 வருமான வரி சட்டம் பிரிவு 80 சி -யின் கீழ் வரிச் சலுகை பெற முடியும்.

இந்த ஃபண்டின் சில சிறப்பம்சங்கள் :

* ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் போது முழுத் தொகைக்கும், நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை பெற முடியும். இதன் மூலம் அதிகபட்சம் 30,900 ரூபாய் வரிச் சேமிக்க முடியும்.
* இந்த ஃபண்ட் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மற்றும் மூலதன ஆதாய வரிக்கு வரிச் சலுகை உண்டு.
* எஸ்.ஐ.பி. மற்றும் எஸ்.டி.பி. முறையில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
* இதில் திரட்டப்படும் நிதி 80 சதவிகிதம் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
* இந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க் பி.எஸ்.இ. 200 இண்டெக்ஸ்
* என்.எஃப்.ஓ. காலம் - 2013 ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 வரை உள்ளது.

இந்த ஃபண்டை அறிமுகப்படுத்தி பேசிய ஐ.டி.பி.ஐ. அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் ஃபண்ட் மேனேஜரான வி.பாலசுப்பிரமணியன்,'' முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி., எஸ்.டி.பி. முறைகளில் இந்த ஃபண்டில் முதலீடு செய்து கொள்ளலாம். முதலீட்டாளர்களின் வரிச் சுமையை குறைப்பதில் இந்த ஃபண்ட் உதவும்"

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ