Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நடத்தும் ‘கிருஹப்பிரவேசம்’ கண்காட்சி:


 சென்னை வர்த்தக மையத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15 ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலான கண்காட்சி நடைபெறுகிறது. நன்கு அலசி ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட ‘ரெசிடென்சியல் மைக்ரோ மார்க்கெட்ஸ் ஆப் சென்னை’ என்ற ஆய்வறிக்கையும் இந்தக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது.சென்னையில் வீடு வாங்கும் விருப்பம் உள்ளவர்களுக்கு, இந்த ஆய்வறிக்கை வழிகாட்டும். சென்னையில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் ‘கிரஹப்பிரவேசம்’ கண்காட்சியில் 100 க்கும் அதிகமான பில்டர்களின் 200 புதிய ப்ராஜக்ட்கள் இடம் பெறுகின்றன.

 சென்னை கிருஹப்பிரவேசம் கண்காட்சி பற்றி இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. கணேஷ் வாசுதேவன் கூறுகையில்,டாலர் மதிப்பு உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் வீடு வாங்கும் ஆர்வம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) மத்தியிலும் அதிகரித்து வருகிறது.‘‘பொருளாதார சூழ்நிலையில் சற்று ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும் சென்னையில்
ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம் சீராக இருக்கிறது. மக்களிடம் வீடு வாங்கும் ஆர்வமும்தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

‘கிருஹப்பிரவேசம்’ கண்காட்சியில் அக்னி எஸ்டேட், பிரின்ஸ் ஃபவுண்டேஷன்ஸ், கிரீன் ஹோம்ஸ், வி.ஜி.என், அரிஹந்த், மை விஜிபி, அர்பன் ட்ரீ, ரோமா, அசிநாத் ஹோம் ஃபைண்டர்ஸ், ஆன்டனி ப்ராஜக்ட்ஸ், ஷீர்டி ஷெல்டர்ஸ், யுனிடெக், முகுந்தன் ப்ராஜக்ட்ஸ்,
கிரீன் ட்ரீ மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP