Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிதி கணக்குகள் சரிவு!

மியூச்சுவல் ஃபண்ட்  நிதி கணக்குகள் சரிவு!
 
 

நடப்பு  நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர்) மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) கணக்குகள் எண்ணிக்கை சுமார் 15 லட்சம் குறைந்து 4.13 கோடியாக சரிந்துள்ளது. இது 2013 மார்ச் மாதத்தில் 4.28 கோடியாக இருந்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குச் சார்ந்த ஃபண்ட்களில் யூனிட்களை விற்பனை செய்தது,  ஆனால் இதர திட்டத்துக்கு முதலீட்டை மாற்றியது உள்ளிட்டவற்றால் கணக்கு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த கணக்குகளில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ளது.
 
 
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பங்குச் சந்தை வர்த்தகம் மிக குறைந்து இருந்தது. எனவே, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்தனர். பங்கு சார்ந்த கணக்குகள் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல் சரிந்து 3.32 கோடியிலிருந்து 3.11 கோடியாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு எண்ணிக்கை 3.82 லட்சம் உயர்ந்து 65 லட்சமாக அதிகரித்துள்ளது. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டும் கலந்த கலவை (பேலன்ஸ்ட்) ஃபண்ட்களில்  முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சம் அதிகரித்து 27 லட்சமாக உயர்ந்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ