Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபியோ: வியட்நாம் இன்டர்நேஷனல் வர்த்தக கண்காட்சி டிச. 4 2013 தொடக்கம்

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபியோ (FIEO) சார்பில் 11 வது வியட்நாம் இன்டர்நேஷனல் வர்த்தக கண்காட்சி வரும் டிசம்பர் 4 (2013) தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி டிசம்பர் 7 ம் தேதி வரை நடக்கிறது.  கண்காட்சி ஹோ சி மின் சிட்டியில் நடக்கிறது.



 ஃபியோ தலைவர் ரஃபீக் அகமது கூறும் போது, '' இந்தக் கண்காட்சி மூலம் இந்தியா மற்றும் வியாட்நாம் இடையே வர்த்தகம் அதிகரிக்கும். அந்த வகையில்  2015 ஆம் ஆண்டில் 700 கோடி டாலராக அதிகரிக்கும். இந்தக் கண்காட்சியில் பார்மா, பயோ டெக்னாலஜி, ரசாயனங்கள்,  விலங்கு உணவுகள், கல்விச் சேவைகள், உணவு பதப்படுத்துதல், பருத்தி ஜவுளிகள், கைவினைப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள், சைக்கிள்கள்,  சமையல் அறை சாதனங்கள் போன்றவை இடம் பெறுகின்றன.


ஃபியோ தலைவர் ரஃபீக் அகமது


இந்தக் கண்காட்சி மூலம் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள்,  உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் பயன் அடைவார்கள்"என்றார்.

இத்தகவலை ஃபியோ தென் மண்டல இணை இயக்குநர் கே.உன்னிகிருஷணன் தெரிவித்துள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ