Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.சி.ஐ.சி.ஐ அகாடமி ஃபார் ஸ்கில்ஸ் மையம் சென்னையில் திறக்க முடிவு!

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில் தொழில் பயிற்சி அளிக்க ஐ.சி.ஐ.சி.ஐ  அகாடமி ஃபார் ஸ்கில்ஸ் மையம் திறக்க சென்னையில் நேற்று (26-11-2013) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
இந்த மையம் விற்பனை திறன், அலுவலக திறன் மற்றும் வெப்டிசைனிங் ஆகிய துறைகளில் பட்டதார்களுக்கு பயிற்சி அளிக்கும். இப்பயிற்சிக்கான பாடத் திட்டங்களை முறையே டாலி சொலியூசன்ஸ் மற்றும் என் ஐஐடி லிமிடெட் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. ஆண்டிற்கு 5000 இளைஞர்களுக்கு 9 பயிற்சி மையங்கள் மூலமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயல் இயக்குனர் என்.எஸ். கண்ணன் வர்த்தகம் மற்றும் சமூக பொறுப்புணர்வு காரணமாக தேச வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று கூறினார்.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP