Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில்நுட்பத் துறைகள் சரிவை சந்திக்கும்!

சில்லறை வர்த்தகம், எஃப்.எம்.சி,ஜி, உள்கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு துறை பணி நியமனங்களில் வளர்ச்சியை சந்திக்கின்ற போதிலும், அரசுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறைகளாக திகழும் உற்பத்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகள் பின்னடைவைச் சந்திக்கும். மேலும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தி துறைகள் தேசிய அளவில் உயர்வைச் சந்தித்து வருகின்ற போதிலும் தமிழகத்தில் இது பின்னடைவைச் சந்திக்கலாம் என்றும் தெரிகிறது.
அதேசமயம் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லாத போதிலும் பணி நியமனங்களில் காணப்படும் ஒட்டு மொத்த சரிவு நிறுவனங்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை நகரில் வருடாந்திர மற்றும் அரையாண்டு கண்ணோட்டம் இந்த நிலை தொடரும் வகையில் தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் என்று மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பு சூழ்நிலை குறித்து டீம்லீஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் & மூத்த துணைத் தலைவர் 
ரிதுபர்ண சக்ரவர்த்தி அறிக்கை விடுத்துள்ளார்.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP