Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

16,000 பட்டாதாரிகளுக்கு வேலை!

இந்தியாவில் முன்னணியில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் உள்ள இன்போஸிஸ், நல்ல வளர்ச்சி காரணமாக அதிகப்படியான அவுட்சோர்ஸிங் கான்ட்ராக்ட்கள் உள்ளதாலும், அடுத்த வருடம் 16,000 கல்லூரி பட்டதாரிகள் வேலைக்கு தேவைப்படலாம் என்று அறிக்கை விடுத்துள்ளது. 

மேலும் டி.சி.எஸ் நிறுவனம் புதிதாக கல்லூரி முடித்து விட்டு வருபவர்களை 25,000 பேரை மார்ச் 2015க்குள் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை விடுத்துள்ளன. 
 
இதையடுத்து முன்பெல்லாம் 60&70 சதவிகிதம் மாணவர்களை கேமப்ஸ்ஸில் தேர்தெடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது சில வருடங்களாக ஐ.டி நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் கான்ட்டிராக்ட்கள் அதிகம் இல்லாத காரணத்தால், வேலையிருந்து வெளியேற்றம் செய்தன. சில நிறுவனங்கள் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள விகிதங்களை குறைத்தன. மேலும் சில வருடங்களாக 40 சதவிகிதம் மாணவர்களை மட்டுமே கேம்பஸ்ஸில் தேர்தெடுக்கின்றன என்று மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ