Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு வாங்குபவர்களை கவர வட்டி குறைப்பு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டிஎஃப்.சி போன்ற பேங்குகள்  வீட்டு கடனுக்கான வட்டியை சிறிது குறைத்துள்ளன. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  மகளிர் பெற்றுள்ள வீட்டு கடனுக்கான வட்டியில் 5 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. அதேசமயம்  நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, வீட்டு கடன் தொகையையும் உயர்த்தியுள்ளது. 
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய முறையில், இதற்கு முன்னர் ரூ.30 லட்சம் வரை கடன் வரம்பு தற்போது ரூ.75 லட்சம் வரையிலும்,   இதற்கு முன்னர் ரூ.30 லட்சத்திற்கு மேல் இருந்த கடன் வரம்பு ,  ரூ.75 லட்சத்திற்கு மேல் என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்  ரூ.75 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கு ஒரே மாதிரியாக 10.15 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும். (தற்போது, ரூ30 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கு 10.30 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). ரூ.75 லட்சத்திற்கு அதிகமான வீட்டு கடனுக்கு 10.30 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும். அதேசமயம் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்குகளின் வீட்டு கடன்களுக்காம வட்டி விகிதம் 10.25 சதவிகிதமாக குறைத்துள்ளன. 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ