Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரூபாய் நோட்டுகளில் எழுதி இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1, 2014-ற்கு பிறகு  செல்லாது எனவும், அந்த ரூபாய் தாள்களை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்ளாது எனவும் வதந்திகள் வெளியாகி வந்தன. இது முறையான தகவல்தானா என்று கூட தெரியாமல் ஃபேஸ்புக்கில் சிலகாலம் இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று ஆர்பிஐ, இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், ‘‘ரூபாய் நோட்டுகளில், ஏதேனும் கிறுக்கல் இருந்தால், அதை வங்கிகள் ஏற்காது என்ற வதந்தியை நம்ப வேண்டாம். அத்தகைய நோட்டுகளை, வங்கிகள் வழக்கம் போல் வாங்கிக் கொள்ளும். அதற்கு, எந்த தடையையும், ரிசர்வ் வங்கி விதிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரூபாய்தாள்கள் தேசிய கொடிக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்பதால் மக்கள் அதில் எழுதாமல் இருப்பதே நல்லது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close