Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியாரை நிறுவனக்களைவிட எல்ஐசி பெஸ்ட்

பாலிசிகளுக்கு செட்டில்மெண்ட் செய்வதில் தனியார் காப்பீடு நிறுவனங்களைவிட எல்.ஐ.சி. சிறப்பாக செயல்பட்டுள்ளது என காப்பீடு நிறுவனங்களின் கட்டுபாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ. தெரிவித்துள்ளது. 
க்ளைமுக்கு  வரும் பாலிசிகளில் எல்.ஐ.சி கடந்த ஆண்டில் சராசரியாக 97.73 சதவிகித பாலிசிகளுக்கு க்ளைம் கொடுத்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் 97.42 சதவிகிதம் கொடுத்துள்ளதுதாம். இதுவே தனியார் காப்பீடு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், 2012 -13ல் தனியார் காப்பீடு நிறுவனங்கள் 88.65 சதவிகிமும், 2011 -12 ஆண்டில்  89.34 சதவிகிதமும் செட்டில்மெண்ட் செய்துள்ளது. 
 
காப்பீடு நிறுவனங்களுக்கு ப்ரீமியத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 2.87லட்சம் கோடிகளை எட்டியுள்ளது என்றும், எல்.ஐ.சியின் வளர்ச்சி சென்ற ஆண்டைவிட 2.92 சதவிகித அதிகரித்துள்ளதாகவும் ஐ.ஆர்.டி.தெரிவித்துள்ளது. மேலும் க்ளைமுக்கு வருபவற்றில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் 3.47 சதவிகித பாலிசிகளை ஆண்டு இறுதிவரை  காத்திருப்பில் வைத்திருப்பதாவும், இது எல்ஐசியில் 1.04 சதவிகிதமாக உள்ளதாகவும் ஐ.ஆர்.டி.ஏவின் 2103 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close