Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை!

டெல்லியில் நடந்த பெண் கற்பழிப்புச் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவையே வெட்கி தலைகுனியச் செய்தது. அதே சமயத்தில் இந்திய மக்கள் அனைவரையும் பெண்களின் பாதுகாப்பு குறித்த நிலையை பற்றியும் யோசிக்க வைத்தது. அந்த சம்பவம் மட்டுமல்லாமல் மும்பையில் நடத்த பத்திரிக்கையாளர் பெண் கற்பழிப்பு சம்பவமும் பெண்கள் இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கிறார்கள் என்ற நிலையை அனைவருக்கும் உணர்த்தியது.  இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்த நமது இந்திய அரசாங்கம் பொது வாகனங்களில் (பேருந்துகள் மற்றும் ரயில்களில்) சோலார் தொழில்நுட்பங்களின் மூலம் இயங்கும்படியான சி.சி.டிவி கேமராக்கள் மற்றும் ஒலி பெருக்கிகள் போன்றவற்றை பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொருத்த இருப்பதாக முடிவு செய்திருக்கிறது.   

இதன் மூலம் பயணங்களின் போது பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும், பெண்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் படியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்காக நம் இந்திய அரசாங்கம் 1,045 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கி, முதல் கட்டமாக பத்து லட்சங்களுக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் இடங்களில் இயங்கும் பேருந்துகளில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ