Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏடிஎம் கட்டணங்களை அதிகப்படுத்த முடிவு!

வாடிக்கையாளர்கள் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருக்கிறார்களோ, அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கட்டணம் எதுவும் இல்லாமல் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதுபோல மற்ற வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தின் உதவியுடன் மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமில்லாத பண பரிவர்த்தனையும், அதற்கு அடுத்த முறை பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறையும் நடைமுறையில் இருந்து வந்தது. 
ஆனால் இனி எந்தவொரு ஏடிஎம் இயந்திரத்தை பணபரிவர்த்தனைக்கு பயன்படுத்தினாலும் அதற்கு தனியாக கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த முறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நடைமுறை வெளியீடு குறித்து ஆர்பிஐ  துணை கவர்னர் கே.சி.சக்ரபர்தி தனது அறிக்கையில் ,‘‘ வாடிக்கையாளர்கள் மற்ற வங்கியினது ஏடிஎம்-ஐ பயன்படுத்தி மேற்கொள்ளும் கட்டணமில்லா பணபரிவர்த்தனைக்கும் அந்த 
வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும் வரியுடன் கூடிய தொகையை வழங்குகிறது. இதனால் வங்கிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதனால் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை’’ எனவும் தெரிவித்துள்ளார். 
 
 

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ