Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரவு நேரங்களில் ஏடிஎம் மையங்கள் மூடப்படும்!

பெங்களூரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு பிறகு, வங்கி நிர்வாகம் அச்சத்துடன் காணப்பட்டது. அனைத்து இந்திய வங்கிகளுக்குக் ஆர்பிஐ வங்கியினது அனைத்து ஏடிஎம் மையங்களிலும் உயர்ரக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், கட்டாயம் காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது போன்ற பல கூடுதல் விதிமுறைகளை விதித்திருந்தது. 
இந்த விதிமுறைகளை தொடர்ந்து வங்கி நிர்வாகங்கள் பணபரிவர்த்தனை குறைவாக நடக்கும் ஏடிஎம் மையங்களை இரவு நேரங்களில் மூடுவதாக தகவல் வெளியிட்டிருக்கிறது. இதற்கு காரணம், ‘‘ஒரு ஏடிஎம் மையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பண பரிவர்த்தனையை மேற்கொண்டால்தான் அந்த ஏடிஎம் மையத்தை நிர்வகிக்க செலவை வங்கியால் ஈடு செய்ய முடியும். அதனால்தான் ஐந்துக்கு மேல் பண பரிவர்த்தனை நடைபெறாத ஏடிஎம் மையங்களை மூட முடிவு செய்துள்ளோம்’’ என்று வங்கி நிர்வாகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP