Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஓபி கனெக்ட் கார்டு அறிமுகம்!

ஐஓபி கனெக்ட் கார்டு அறிமுகம்!
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கனெக்ட் கார்டு என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. விசா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கார்டு ஏடிஎம் கார்டுகள் போலவே செயல்படும் என்றும், இந்த கார்டு இளைய தலைமுறையினர்களை கருத்தில் கொண்டே வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஐஓபி சொல்லி இருக்கிறது.

இந்த கனெக்ட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ஷாப்பிங்கும் செய்யலாம். இதன் மூலம் செய்யும் ஆன்லைன் ஷாப்பிங்கை ஊக்கப்படுத்த வாங்கும் பொருட்களுக்கு ஐந்து சதவிகிதம் தொகைகை திரும்ப செலுத்தும்படியான சலுகையையும் ஐஓபி வழங்கி இருக்கிறது. இது தவிர சேனல் ஃபைனான்ஷிங் எனப்படும் நிதிச் சேவையை தனது நிறுவனங்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்ளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த கனெக்ட் கார்டுகள் ஐந்து லட்சம் விற்பனை மையங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது ஐ.ஓ.பி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ