Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை சரிவு!

 கடந்த ஆண்டில் ஏற்பட்ட நடப்பு கனக்கு பற்றாக்குறையால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனால் வாகன விற்பனை என்பது குறைந்துள்ளன என்று பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதையடுத்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இரு சக்கர வாகன விற்பனை 12.63 சதவிகிதம் குறைந்து 2,60,645 ஆக குறைந்துள்ளது. 

மேலும் கடந்த ஆண்டு இதேகாலத்தில் 2,98,350 வாகனங்கள் விற்பனையாகியது என்றும் கூறியுள்ளது. அதே சமயம் 19.63 சதவிகிதம் வாகனங்களை ஏற்றுமதி செய்து 1,50,753 ஆக இருந்தது. இது கடந்த வருடம் 1,26,016 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ