Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கைகொடுக்கும் 2014 லாபகரமாக சொத்து சேர்க்க சூப்பர் ஃபார்முலா!

 

சிறப்பான நிர்வாகம், வலிமையான பிசினஸ் கொண்ட நல்ல நிறுவனங்களின் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால், நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

வாழ்க்கையில் ஏற்றஇறக்கம் சாதாரணம் என்பதுபோல், முதலீட்டிலும் ஏற்றஇறக்கம் என்பது சாதாரணம். இதை ஒரு முதலீட்டாளர் புரிந்து கொண்டால் முதலீட்டின் மூலம் நல்ல லாபத்தை அறுவடை செய்ய முடியும்.

2014-ம் ஆண்டுக்கான முதலீட்டு உத்திகளைப் பற்றி பார்க்கும்முன், முதலீடுகள் குறித்த பொதுவான பயனுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டால், நம் முதலீடு மேலும் சிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

முதலீட்டு உத்திகள்!

ரியல் எஸ்டேட், கடன் சார்ந்த திட்டங்கள்,  தங்கம் மற்றும் பங்குச் சந்தை போன்ற அனைத்து சொத்துப் பிரிவுகளும் இயற்கையிலே சுழற்சி முறையைக் கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரியல் எஸ்டேட் நன்கு செயல்படும்; ஒரு குறிப்பிட்ட காலத்தில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும். ஆனால், இந்தக் காலகட்டத்தைக் கணிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்தக் காலகட்டம் சில சமயம் ஓராண்டாகவோ, பல சமயம், 4-5 ஆண்டுகளாகவோ இருக்கும்.  

முதலீட்டைப் பிரித்து செய்வது என்பது மிக முக்கியமான விஷயம். இது ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து அமைவது அவசியம். அதேநேரத்தில், சரியான அசெட் அலகேஷனுக்கு எளிய ஃபார்முலா எதுவும் கிடையாது.

ஒரே வயது, வருமானம், சொத்து கொண்ட இரு முதலீட்டாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் தேவையைப் பொறுத்து அவர்களின் அசெட் அலகேஷன் மாறுபடும்.

முதலீட்டின் மதிப்பு குறைந்தால், பதற்றப்படாமல் இருப்பது மிக அவசியம். பங்கு முதலீட்டில்,  மூலதனம் 30% அளவுக்கு குறைந்தாலும் அதனை ஜீரணித்துக்கொள்ளும் குணம் ஒரு முதலீட்டாளருக்கு இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால், முதலீட்டாளரின் ஆலோசகர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அந்த முதலீட்டாளர் பங்கு முதலீட்டை தவிர்ப்பது நல்லது.

முதலீட்டை விற்று உடனடியாக பணமாக்குவது என்பது மிக முக்கியம். அந்தவகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டை தவிர்ப்பது நல்லது.

உங்களின் ஓய்வுக்காலத் தேவையை ஈடுகட்டும் விதமாக உங்களின் கடன் சார்ந்த முதலீடுகள் மீதான வருமானம் (பணவீக்கம் மற்றும் வரிக்குப் பிந்தைய நிலையில்) இல்லை என்றால் அந்தக் கடன் சார்ந்த முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

 

மேலும் வாசிக்க தற்போது விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ