Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி வந்தாலே பணம் கேட்பார்களோ!

பணம் எடுப்பதற்கு அதுவும் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது மிகவும் கேலிக்கூத்தானது. பணம் எடுப்பதால் அதிக செலவாகிறது என வங்கிகள் மக்களிடம் கட்டணம் வசூல் செய்தால், மக்கள் வங்கிக்கு போனால் கூட அவ்ர்களிடமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளூநர் சி.கே. சக்கரவர்த்தி செய்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.  
மேலும் வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் பணம் பெற வேண்டியிருந்த நிலையில், அதற்கு ஊழியர்கள் சம்பளம் காகிதச் செலவு மின் செலவு அலுவலக செலவு போன்ற பல்வேறு செலவினங்களை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு நல்ல மாற்றாக ஏடிஎம்கள் வந்தன இல்லை என்ற நிலை இல்லாமல் வங்கிகள் அளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஏ.டி.எம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வந்துள்ளது. இந்த ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏ.டி.எம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ