Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்க நகைக் கடன் வழங்குவதற்கான கட்டுபாடு தளர்வு!

 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்க நகைக் கடன் வழங்குவதற்கான கட்டுபாடுகளை ஆர்.பி.ஐ தளர்த்தியுள்ளது. அதாவது தங்க நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் வரை கடன் வழங்கலாம என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜீன் மாதத்தின் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதை அடுத்து அடமானம் வைத்த தங்க நகைகளின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. அத்துடன் தங்கத்தின் பயன்பட்டை குறைப்பதற்காக ஆர்பிஐ தங்க நகை அடமானத்தில் அதிக கட்டுபாடுகளை விதித்தது. அதாவது தங்க நகையின் மதிப்பில் 60 சதவிகிதம் வரைதான் கடன் வழங்க வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெறுபவர்களிடமிருந்து பான் கார்டு எண் வாங்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வழங்கும் போது காசோலையாகத்தான் வழங்க வேண்டும். 
மேலும் நகை அடமானம் வைப்பவரிடம் கேஒய்சி விண்ணப்பத்தை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். அடமானம் வைக்கும் நகைகள் யாருடைய என்பதற்கான ஆதாரங்களை வாடிக்கையாளரிடமிருந்து வாங்க வேண்டும். நகையின் தரத்தை நிதி நிறுவனங்களின் அடமானம் வைக்கும் போது கொடுக்கும் ரசீதில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என ஆர்.பி.ஐ. தெரிவித்திருந்தது.  நிதி நிறுவனத்தின் கிளைகள் அனைத்திலும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமென பல்வேறு கட்டுபாடுகளை விதித்திருந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close