Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டத்துறையும், அமலாக்கத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!

அதிகமாக வட்டி தருவதாக ஆசை காட்டி பெரும்பாலான நிறுவனங்கள் மக்களிடமிருந்து நிதியை திரட்டி பின்னர் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர். இந்த சம்பவம் நாடெங்கிலும் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்து செபி (பங்கு பரிவர்த்தனை வாரியம்) அமைப்பின் தலைவர் யூ.கே.சின்ஹா, ''சட்டத்துறை மற்றும் அதை அமலாக்கும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருந்தால், மக்களுக்கு பல்வேறு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தி, அந்த முதலீட்டின் மீதான வட்டியை அதிகமாக வழங்குகிறோம் என்று சொல்லி ஏமாற்றும் நிதி நிறுவனங்களை அடியோடு ஒழிக்கலாம். 
மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரியான நிதி நிறுவனங்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே கண்டு பிடித்து ஒழிக்கலாம். இந்த விவகாரத்தில்வ் தலையிட செபிக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்திருப்பதால் கண்டுபிடிக்கப்படும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மாநில அரசு, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இதுபோல தவறு செய்யும் நிறுவனங்களைப் பிடிக்க முடியும். 
 
இப்போதுதான் இத்தகைய புலனாய்வு அமைப்புகளுடன் செபி-யின் ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளது. மக்கள் ஏமாறுவதைத் தடுக்க இந்த ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் '' முதல்கட்டமாக மாநிலங்களிடையே உள்ள புலனாய்வு மற்றும ஒழுங்குமுறை அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார், அசாம் ஆகிய மாநிலங்களில் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்" தெரிவித்திருக்கிறார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ