Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாடுவாழ் இந்தியர்களே... இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்!

இன்றைய நிலையில் இந்தியாவில் பிறந்து வளர்ந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்பட நாள்பட அவர்கள் அங்கேயே குடியேறவும் செய்கிறார்கள். இப்பபடியாக வாழ்ந்து வரும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் பல துறைகளில் காத்திருக்கின்றன. அவர்களை கருத்தில் கொண்டு மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். டெல்லியில் கடந்த புதன்கிழமை 12-வது 'பர்வேஸி திவஸ்' என்னும் மாநாடு நடந்தது.
 இந்த மாநாடு வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒருங்கிணைப்பதற்காக நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் ஆனந்த் சர்மா வெளிநாடுவாழ் இந்தியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவர், ''இந்திய அரசாங்கம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் செய்யும் முதலீட்டின் மீதான விதிமுறைகளை (முக்கியமாக சில்லறை வர்த்தகம் மற்றும் விமானத் துறைகளின் மீதான விதிமுறைகளை) தளர்த்தியுள்ளது. அதே போல உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு அதிகம் என்பதால் அந்த துறையை வலுப்படுத்த புதிய கொள்கைகளை இந்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதனால் இந்திய பொருளாதாரம் நிச்சயம் வளரும். உலகின் தலைசிறந்த டவுன்சிப்களில் ஒன்றாக இந்தியா விளங்கும். அதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் வாழ்பவர்களோடு சேர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்களும் லாபம் சம்பாதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ