Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய அரசியல் கட்சிகளுக்கு கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை!

தேசிய அரசியல் கட்சிகளுக்கு கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளது என பொருளாதார சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. 2004&05 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு 87 சதவிகிதம் நன்கொடை இப்படி கிடைத்துள்ளது. இந்த காலக் கட்டத்தில் மொத்தமாக அரசியல் கட்சிகள் 435 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இதில் 378 கோடி ரூபாய் கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலமாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

இதில் பாரதீய ஜனதா கட்சிக்கு அதிகம் நன்கொடை பெற்றுள்ளது. இதன் மதிப்பு 192 கோடி ரூபாய் ஆகும். 172 கோடி ரூபாய் நன்கொடை பெற்று காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
ஜெனரல் எலக்ட்ரிக்கல் டிரஸ்ட் மற்றும் ஆதித்திய பிர்லா நிறுவனம் அதிக நன்கொடை வழங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த கம்பெனிகள் காங்கிரஸ் கட்சிக்கு 36.4 கோடி ரூபாயும், பிஜேபி கட்சிக்கு 26.6 கோடி ரூபாயும் நன்கொடை வழங்கியுள்ளது. 
 
அரசியல் கட்சிகளின் பெயர் மொத்த நன்கொடை     கார்ப்ரேட் நிறுவனம் 
                                                                                                                வழங்கிய நன்கொடை  
 
காங்கிரஸ்                        187.56 கோடிரூபாய்                         172.25
பிஜேபி                226.46 கோடிரூபாய்                         192.47
தேசியவாத காங்கிரஸ்          12.35  கோடிரூபாய்         12.28
சிபிஐ(எம்)                             5.71 கோடிரூபாய்         1.78
சிபிஐ                             3.80 கோடிரூபாய்          0.11
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ