Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதார மந்த நிலை: ராணுவத்துக்கான நிதி குறைப்பு!

பொருளாதார மந்த நிலை: ராணுவத்துக்கான நிதி குறைப்பு!

நடக்கும் 2013-2014 நிதி ஆண்டில் இந்திய ராணுவ வளர்ச்சி பணிகளுக்கு பட்ஜெட் நிதியாக ஒதுக்கப்பட்ட ரூ 2.03 லட்சம் கோடியிலிருந்து ரூ.7,800 கோடி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்த போதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான நிதி பற்றாக் குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரையில், ரூ.80,000 கோடி ராணுவ வளர்ச்சிக்காக செல்விடப்பட்டுள்ளது. இது ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 82 சதவிகிதமாகும் . பாதுகப்பு அமைச்சகம், ரூ.40,000 கோடியை கூடுதல் வளர்ச்சி நிதியாக அளிக்குமாறு கேட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுக்கப்பட்டுவந்து, இன்று 7,800 கோடி ரூபாயை குறைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. கடந்த நிதி ஆண்டிலும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க ராணுவத்திற்கான நிதியில் இருந்து ரூ.10,000 கோடியை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தடக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ