Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்!

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டலமானது தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கியது. தென்மண்டலத்தில் 261 கிளை அலுவலகங்களும், 256 துணைகிளை அலுவலகங்களும், 196 சிறு கிளை அலுவலகங்களும் மற்றும் 4392 பணம் செலுத்தும் பிரிமியம் பாயிண்டுகளும் உள்ளன. இந்த நிதியாண்டில் தென் மண்டலத்தில் மட்டும் 14 துணை கிளை அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதாகவும், மேலும் சென்னை வள்ளலார் நகர், தஞ்சாவூர் கோட்டத்தில் திருக்காட்டுபள்ளி, தலை ஞாயிறு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் சவரா ஆகியா 4 துணை அலுவலகங்களும் திறக்கப்பட உள்ளன என்று  இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின், தென் மண்டல மேலாளர் த.சித்தார்தன் வெளியிட்டுள்ளார்.
மேலும் கடந்த நிதியாண்டில் தனி நபர் காப்பீட்டில் டிசம்பர் இறுதிவரை 29 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்து, 2711 கோடி பிரிமியம் ஈட்டியுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதம் மட்டும் 8 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்து 850 கோடி பிரிமியம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய பாலிசிகள் அறிமுகம்!
திட்டம் எண்814- புதிய எண்டோமென்ட் திட்டம் (8 வயது முதல் 55 வயது வரை பங்கேற்கலாம்.)
திட்டம் எண்815- புதிய ஜீவன் ஆனந்த் திட்டம் (எண்டோமென்ட் திட்டமாகவும், ஆயுள் முழதும் காப்பீட்டு வசதி கொண்ட திட்டமாகவும் உள்ளது.)
திட்டம் எண்816- புதிய பீமா பிச்சத் திட்டம். ஒரே தவணை பிரிமியம், 3 வது வருடம் பண மீட்பு பெறும் வசதி உண்டு.
திட்டம் எண்817- ஒரே தவணை எண்டோமென்ட் திட்டம். (3 மாத குழந்தை முதல் 65 வயது வரை பங்கேற்கலாம்)
திட்டம் எண்820- 20 வருட பண மீட்புத் திட்டம். (பாலிடியின் 5,10,15 வருடங்களில் பண மீட்பு பெறலாம்)
திட்டம் எண்821- 25 வருட பண மீட்புத் திட்டம். (பாலிசியின் 5,10,15,20 வருடங்களில் பண மீட்பு பெறலாம்)
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ