Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டை பிரித்து முதலீடு செய்யுங்கள்!

பொதுவாக பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் செய்யும் தவறே முதலீட்டை ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வது தான். இதிலிருந்து எவ்வாறு தவிர்க்கலாம்? என்று ஐ.எஃப்.சிஐ நிறுவனத்தின் சீனியர் டீலர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் விரிவாக சொல்கிறார்.
பொதுவாக முதலீட்டாளர்கள் நீண்ட கால அல்லது குறுகிய கால பங்கு முதலீடு குறிப்புகள் அடிப்படையில் தம் கைகளில் இருக்கும் ரொக்கத்தை முழுவதுமாக ஒரே சமயத்தில் முதலீடு செய்கிறார்கள். அப்படி செய்யும் பொழுதும் பல்வேறு காரணங்களால் உலக மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தில் சுனக்கம் ஏற்படும் பொழுது வாங்கிய பங்குகள் சரிந்து விடுகிறது. 
 
அப்படி இறங்கும்பொழுது பங்குகளை லாபத்தில் விற்று அவர்களது ரொக்கங்களை வெளியே எடுக்கமுடியாமல் போவது வழக்கமாகிவிடுகிறது. அவர்கள் அந்த பங்குகள் வாங்கிய விலையை விட மேலே வந்து தகுந்த லாபம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி ஒரேயடியாக முதலீடு செய்யாமல் சிறிது சிறிதாக முதலீடு செய்தால் ரொக்க முடக்கத்திலிருந்து  தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது முதலீட்டாளர்கள் ஒரேயடியாக ஒரே சமயத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலீட்டாளர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பல சமயங்களில் தம் கையிலிருக்கும் ரொக்கங்களை பிரித்து முதலீடு செய்யலாம். 
 
ஒரு நிறுவனத்தின் பங்குகளின் சந்தையின் விலை நூறு ரூபாய் என்று இருந்தால் இருபது பங்குகளை மட்டும்  இருண்டயிரம் ரூபாயிக்கு முதலில் வாங்க வேண்டும். வாங்கிய இருபது பங்குகள் ஏறி தகுந்த லாபம் கிடைக்குமானால் அந்த பங்குகளை விற்று விட வேண்டும். அப்படியில்லாமல் அந்த பங்கின் மதிப்பு சந்தையின் வீழ்ச்சியில் இறங்கி கொண்டே இருந்தால் 
 
 27 பங்குகள் 75 ந்து ரூபாயிலும் = 27* 75 =2000
 40 பங்குகள் 50 ம்பது ரூபாயிலும்= 40*50=2000
 80 பங்குகள் 25 ந்து ரூபாயிலும் =80*25=2000 வாங்க வேண்டும்.         
 20 பங்குகள் 100 ரூபாயி லும் = 20*100=2000 (முதலில் வாங்கியதையும் சேர்த்தால்)                                                                          
 மொத்தம் =  167 பங்குகள் 8000 ரூபாயிக்கு  வாங்கிவிடுகிறார்.
 
அப்படியென்றால் 167 பங்குகளின் வாங்கிய விலையை சராசரி(8000 ரூபாயை 167 பங்குகளால் வகுத்தால்) செய்தால் 47 ரூபாய் 90 பைசாவாக மாறிவிடுகிறது. சந்தை மீண்டும் ஏறும்பொழுது அந்த பங்குகளின் அறுபது எழுபது ரூபாயிக்கு உயரும் பொழுதே அந்த முதலீட்டாளர் அந்த பங்குகளை சுலபமாக விற்று 
லாபத்துடன் வெளியே வந்துவிடலாம். இரண்டு தடவை சராசரி செய்ததற்கு பிறகே சந்தை உயர்ந்து பங்குகளின் விலை மேலே வந்து தகுந்த லாபம் கிடைத்தால் அதை விற்று விட வேண்டும். அந்த பங்குகளின் விலை மீண்டும் இறங்கி சராசரி செய்வதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த வழிமுறை நிஃப்டி, சென்செக்ஸ் மற்றும் மற்ற பிரிவுகளில் ஃபண்டமெண்டலி பலமான பங்குகளுக்குதான் பெரும்பாலும் பொருந்த வாய்ப்பிருக்கிறது. மற்ற ஃபண்டமெண்டலி பலமில்லாத பங்குகளுக்கு இந்த வழிமுறை பெரும்பாலும் கைகொடுக்காது.                                                                                                   
                                                                      
                                                                    
 
         
                                                
                                                          
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ