Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன் வட்டி விகிதங்கள் மாற்றப்படுமா?

போதுமான வரத்து காரணமாக காய்கறி விலை குறைந்ததால், கடந்த  டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு 6.16 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனையடுத்து, ஜனவரி 28ல் வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு 7.52 சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது டிசம்பரில் இந்த பணவீக்கம் 1.36 சதவிகிதம் குறைந்துள்ளது. 
 
கடந்த ஆண்டு நல்ல பருவமழை காரணமாக காய்கறிகளின் உற்பத்தி மற்றும் உணவு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தத்தில் காய்கறி விலை 30 சதவிகிதம் குறைந்துள்ளது. மொத்த விலை பணவீக்கத்தை கணக்கிடுவதில் 14.34 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ள உணவு பணவீக்கம் டிசம்பர்  மாதத்தில் 13.68 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 19.93 சதவிகிதமாக இருந்தது.
 
சில்லறை பணவீக்கம்!
உணவு பொருள் விலை குறைந்ததையடுத்து, டிசம்பர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு 9.87 சதவிகிதமாக குறைந்துள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ