Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன்பத்திர வெளியீட்டு திட்டம் தள்ளி வைப்பு!

நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் மத்திய அரசு ஜனவரி 17&ம் தேதியன்று ரூ.15,000 கோடிக்கு கடன்பத்திரங்களை ஏலம் வாயிலாக விற்பனை செய்ய முடிவு செய்து இருந்தது. இந்நிலையில் ரொக்க வரத்து அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் இந்த கடன்பத்திர வெளியீட்டு திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் பத்திர ஏலம் இந்த நிதி ஆண்டில் நடைபெறவில்லை என்றால் உள்நாட்டில் மத்திய அரசு திரட்ட திட்டமிட்டிருந்த மொத்த தொகை ரூ.5.79 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.64 லட்சம் கோடியாக குறையும். மேலும் ஆண்டில் நடப்பு கனக்கு பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP