Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா பொருளாதாரத்தில் 6% வளர்ச்சி ஏற்படும்!

இந்தியாவில் 2014-15ல் பொருளாதாரத்தில் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடையலாம் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 2016-17ல் 7.1 சதவிகிதமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் உள்நாட்டில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச  அளவில்  2013ல் 2.4 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2014ல்  பொருளாதாரத்தில் 3.2 சதவிகிதம் வளர்ச்சியடையலாம் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.  
 
அதேசமயம், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2014ல் 7.7 சதவிகித அளவிற்கே இருக்கும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 7.5 சதவிகிதமாக குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close