Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும் - சிஐஐ வலியுறுத்தல்!

பணவீக்கம் குறைந்து வருவதை சுட்டிக் காட்டி தொழில்துறையை ஊக்குவிக்க கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளது. 
''தொழில்துறை உற்பத்தியானது மைனஸ் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் இத்துறையை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு முதலாவதாக குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை ரிசர்வ் வங்கி பரிசீலித்து உறுதி செய்ய வேண்டும்'' என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வலியுறுத்தினார். இது குறித்து அசோசேம் செயலர் டி.எஸ். ரவாத், '' கடந்த டிசம்பரில் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் 6.16 சதவிகிதமாகக் குறைந்தது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத சரிவாகும். பொருட்களின் விலை குறைந்துவரும் சூழலே தொழில்துறைகளுக்கு வழங்கும் கடன்கள் மீதான வட்டியை குறைக்க சரியான நேரம்" என்று தெரிவித்திருக்கிறார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ