Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடப்பு நிதி ஆண்டின் பிற்பாதியில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறலாம்!

இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆளுக்கு ஒருபக்கம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை அளித்து வருகிறார்கள். இவர்களைப் போலவே இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்துப் பல பேர் அக்கறை எடுத்து பேசி வரும் நிலையில், சர்வதேச தரச்சான்று நிறுவனமான மூடிஸ் நடக்க இருக்கும் தேர்தல் முடிவுகள் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஓரளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 
''உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் வளர்ச்சியில் தாக்கமானது, மக்களவை தேர்தலுக்குப் பிறகு இருக்கும் என்றும், சமூகப் பாதுகாப்பு திட்டங்களான உணவு பாதுகாப்புச் சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் அரசின் செலவினம் அதிகரிக்கும் என்றும்'' மூடிஸ் நிறுவனத்தின் மூத்த தலைவர் தாம் பெர்னே தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம் நடப்பாண்டில் குறையும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது. இந்திய அரசுக்குப் பிஏஏ3 எனும் தரச்சான்றை இந்நிறுவனம் அளித்ததிருப்பது கவனிக்கத்தகது. ஏனெனில், இந்தக் குறியீடானது மிகக் குறைந்த தரத்தைக் குறிப்பதாகும். நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் தன்மை ஓரளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பதையும் இந்தக் குறியீடு சுட்டிக் காட்டுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ