Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளின் வாராகடன் அதிகரிக்கும் - அசோசெம் அறிவிப்பு!

நடப்பு நிதி ஆண்டின் (2013-14) இறுதியில் வங்கிகளின் வாராகடன் விகிதம் 5% அதிகரிக்கும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. ''கடந்த மார்ச், 2006-ல் வங்கிகளின் வாராகடன் 41,378 கோரு ரூபாயாக இருந்தது. 2007-ம் ஆண்டின் அதே கால கட்டத்தில் 38,305 கோடி ரூபாயாக குறைந்தது. அதன் பிறகு வங்கிகளின் வாராகடன் விகிதமானது தொடர்ந்து ஏற்றத்தில்தான் இருந்து வருகிறது.

இதற்கு பொருளாதார தேக்கநிலை மற்றும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதே காரணம். இதனாலேயே கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை" என்று அசோசெம் சுட்டிக் காட்டியுள்ளது. வங்கிகளால் அதிகமாக கடன் பெற்றிருக்கும் துறைகள் இரும்பு, உருக்கு, கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் விமானத் துறைகள்தான் என்பதையும் அசோசெம் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ