Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக நாடுகளுக்கு ஆப்பு வைத்திருக்கும் அமெரிக்கா!


அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கம்ப்யூட்டர்களில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி ரகசிய சிப் ஒன்றை செருகி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ரகசிய தொழில்நுட்பத்தினால் இணையத் தொடர்பே இல்லாமல் கம்ப்யூட்டர்களில் உள்ள விஷயங்களைத் திருடி எடுத்துக் கொண்டு, கம்ப்யூட்டரையும் செயல்படாமல் (ஹேக்) செய்துவிட முடியும். அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியான கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் நாடுகளைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!



சீன ராணுவம், ரஷ்ய ராணுவம், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள், சவுதி அரேபியா, பாக்கிஸ்தான் மற்றும் இந்திய நாட்டைச் (நம்ம நாட்டுக்கும் ஆப்பு ரெடி) சேர்ந்த உளவுத் துறை அலுவலகங்கள். இந்தச் செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி கசிந்ததும் அமெரிக்க அரசு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நடித்து நாடகமாடியிருக்கிறது. இது மாதிரியான அயோக்கியத் தனத்தைச் சீன அரசு முன்னதாக ஆரம்பித்து விட்டதாம். சீன அரசாங்கம் அமெரிக்காவிடம் இவ்வழியில் ஆடிய ஆட்டத்திற்குப் பிறகுதான் அமெரிக்க அரசானது ரகசிய சிப்களைக் கம்ப்யூட்டரில் பொறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ