Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிப்ரவரியில் ஸ்பெக்ட்ரம் ஏலம்!

வருகிற பிப்ரவரியில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க இருக்கிறது. இதில் பார்தி ஏர்டெல், வோடோபோன், ஐடியா செல்லுலர் மற்றும் ரிலையன்ஸ் ஜியோகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்திற்காகப் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.3,700 கோடிகளை வங்கிப் பிணை (in the form of a bank guarantee) கொடுத்திருக்கிறது. வோடோபோன், ரிலையன்ஸ் ஜியோகாம் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் முறையே ரூ.2,800 கோடி, ரூ.2,600 கோடி மற்றும் ரூ.1,565 கோடிகளை வங்கிப் பிணையாகக் கொடுத்திருக்கின்றன. 
இந்த நிறுவனங்கள் உள்பட மொத்தம் எட்டு டெலிகாம் நிறுவனங்கள் 11,500 கோடி ரூபாய்க்கு வங்கிப் பிணை கொடுத்திருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் இலக்கே 11,343 கோடி ரூபாய்தானாம். ரெகுலர் லைசன்ஸ், ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் என ஸ்பெக்ட்ரம் மூலம் பெற இலக்கு நிர்ணயித்திருக்கும் மொத்த பணத்தின் மதிப்பு 40,874 கோடி ரூபாய்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ