Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை மாரத்தான் & 20 கோடி ரூபாய்க்கு இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது!!!

நாளை நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான மும்பை மாரத்தான் ஓட்டம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.அடிக்கடி நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள், பொதுமக்கள் நலன் போன்றவற்றை கருத்தில்  கொண்டு இந்த முறை அதிக தொகைக்கு இந்த போட்டி இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டிருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு போட்சன் மாரத்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் போன்றவை நடக்காமலிருக்கவும், சுமார் 40000 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக மூன்றாம் நபர் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் மூலமாகவும், போட்டி முழுவதுமாக சுமார் 20 கோடி செலவில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷுரன்ஸ் மூலமாக இன்ஷுரன்ஸ் செய்யப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close