Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக அளவில் 2014ல் பில்லியன் ஸ்மார்ட்போன்கள் புழங்கும் !

உலக அளவில், 2014 இறுதியில் 1.75 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் புழங்கும் என ஆய்வு நிறுவனமான இ-மார்க்கெட்டர் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதே இதற்கு காரணம் என்றும், ஆண்டு இறுதியில் மொத்தத்தில் 455 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் இந்நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

2012&ல் உலகில் மொத்தம் 100 கோடி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 175 கோடியாக உயர உள்ளது. 2013 மற்றும் 2017 ஆண்டுகளுக்கிடையில் மொபைல் போன் அடர்த்தி 61.1 சதவிகிதத்திலிருந்து 69.4 சதவிகிதமாக உயரும். அதாவது, 2013ல் உலக மக்கள்தொகையில் 61.1 சதவிகிதத்தினரிடம் செல்போன் சாதனங்கள் இருந்தன. இது 2017ல் 69.4 சதவிகிதமாக அதிகரிக்கும். இந்த ஆண்டில், 223 கோடிக்கும் அதிகமானோர் (48.9 சதவிகிதம்) குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை செல்போன் வாயிலாக இணையதளத்தை அணுகுவர். அடுத்த ஆண்டில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் செல்போனில் இணையதளங்களை பார்வையிடுவர் என்று இ-மார்க்கெட்டர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ