Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வால்மார்ட் மீண்டும் இந்தியாவில் நுழைய திட்டம்!

சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் இந்தியாவில் நுழைய தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நிறுவனத்தின் பெயரை மீண்டும் பதிவு செய்துள்ளது.
சங்கிலித் தொடர் நிறுவனங்களை அமைத்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் மிகவும் பிரபலமாக விளங்குவது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பார்தி எண்டர்பிரைசஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இரு நிறுவனங்களிடையிலான 6 ஆண்டுக்கால ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் முறிந்துபோனது. இதைத் தொடர்ந்து 
தன்னிச்சையாக இந்தியச் சந்தையில் நுழைய வால்மார்ட் திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக இந்நிறுவனம் வால்மார்ட் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதை இந்திய நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஜனவரி 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
 
2013-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களிடையே சமநிலை போட்டியை உருவாக்கும் ஆணையம் (சிசிஐ), இந்தியாவிலுள்ள பார்தி குழுமத்தின் 50 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்குவதற்கு அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த வர்த்தக தொழிலில் ஈடுபட அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி பார்தி வால்மார்ட் பிரைவேட் நிறுவனம் இந்தியாவில் மொத்த விற்பனை அங்காடிகளை தொடங்கின. இது சில்லறை நுகர்வோரை எந்த வகையிலும் சென்றடையவில்லை. ஆக தற்போது சில்லறை வர்த்தகத்தில் நுழைய ஆர்வம் காட்டி வருகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ