Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.பி.எல் அணிகள் ஏலத்தில் கார்ப்ரேட் சிஇஓ-க்கள்!

ஐ.பி.எல் ஏலம் வரும் பிப்ரவரி 12,13 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் அணி நிர்வாகங்கள் கார்ப்ரேட் சிஇஓ க்களை ஏல உத்திகளை வகுக்க நியமித்துள்ளன.இதிலும் கடந்த ஆறு தொடர்களில் மிகவும் எதிர்பார்க்கபட்ட கொல்கத்தா அணி. முன்னாள் மெட் லைஃப் - சன் லைஃப் தேசிய தலைமை அதிகாரியான வெங்கடேஷ் மைசோரை நியமித்துள்ளது. அவர் எங்கள் அணித்தேர்வில் நட்சத்திர வீரர் என்பதைவிட அணித் தேவையை கருத்தில் கொண்டு ஏலம் எடுக்கபடும் என கூறியுள்ளார்.

இதே போல் டெல்லி அணியும் டிராவல் எக்ஸ் நிறுவன சிஇஓவை களம் இறக்கியுள்ளது,சென்னை அணியை பொறுத்தமட்டில் பல முக்கிய வீரர்கள் மீண்டும் தொடருவார்கள் என்பதால் அந்த அணி நிர்வாகம் ஏலத்தில் பெரிய நெருக்கடியை சந்திக்காது எனவும் தெரிகிறது. அனைத்து அணிகளும் ஏலத்திற்கு மல்லுகட்ட கார்ப்ரேட் சிஇஓக்களின் உதவியை நாடியுள்ளதால் ஏலத்திற்கு பெரும் பரபரப்பு கூடியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close