Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாட்டின் மறைமுக வரி வருமானம் உயர்வு!

இந்திய நாட்டின் மறைமுக வரி வருமானமானது 6.2% அதிகரித்துள்ளது. உற்பத்தி, சுங்கம் மற்றும் சேவை வரிகள் மறைமுக வரிகளாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இவற்றின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் கிடைத்திருக்கும் வருமானம் 3.55 லட்சம் கோடி ரூபாயாகும். சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் மறைமுக வரி மூலம் கிடைத்திருக்கும் வருவாய் 3,34,309 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவை வரியானது 20% அதிகரித்து 1.10 லட்சம் கோடி ரூபாயாகவும், சுங்க வரி 6.7% அதிகரித்து 1.26 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. ஆனால் உற்பத்தி வரி வருமானம் 4.5% குறைந்து 1.18 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 5.65 லட்சம் கோடி ரூபாயை எட்ட வேண்டும் என்று நமது அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டில் 4.73 லட்சம் கோடி ரூபாய் மறைமுக வருமான வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ