Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனைவி தன் கணவரின் சம்பளத்தைக் கேட்டுப் பெறலாம் - மத்திய தகவல் ஆணையம் அறிவிப்பு!

காலம் காலமாகக் குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள் பெண்களே. திருமணத்திற்குப் பிறகு கணவன் வேலைக்குச் சென்று சம்பாதித்து வரும் பணத்தைக் கொண்டு மனைவிமார்கள் இல்லறத்தை இனிதே நடத்தி வருவார்கள். ஆனால் இப்போது அதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் பெரும்பாலான கணவன்மார்கள் தங்கள் மானைவியிடம் தங்களின் சம்பளம் எவ்வளவு என்பதைச் சொல்லாமலேயே இருந்து விடுகிறார்கள். இதனால் குடும்பத்தில் மனச் சங்கடங்கள் எழவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் மனைவிகளுக்குத் தன்னுடைய கணவனின் சம்பளத்தைத் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.



''அரசு ஊழியர்களின் மனைவியருக்கு, தங்கள் கணவர்களின் சம்பளம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. குடும்பத்தை நடத்துபவர்கள் என்ற முறையில், தங்கள் கணவர்களின் சம்பளத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம், மனைவியருக்கு உள்ளது. அரசு ஊழியர்கள் அல்லது அரசு அதிகாரிகளின் சம்பள விவரங்களை, மூன்றாவது நபர்களின் சொந்த விஷயமாகக் கருத முடியாது. அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், அதைத் தெரிவிக்க வேண்டும்.

தலைநகர் டெல்லியில், இதுபோன்ற தகவல்களை, உள்துறை அமைச்சகம் தெரிவிப்பது இல்லை என, புகார்கள் வந்துள்ளன. உள்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் மனைவி, தன் கணவரின் சம்பள விவரத்தை கேட்டபோது, தகவல் தர மறுத்து உள்ளனர். இனிமேல், இது போல் மறுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மத்திய தகவல் ஆணையர் ஶ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்திருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ