Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆகாஷ் 4 - அடுத்தகட்ட தயாரிப்பு ஆரம்பம்!

மக்கள் குறைந்த விலையில், 'டேப்லெட்' என்ற கையடக்கக் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஆகாஷ் டேப்லெட்டை வெளியிட்டது. ஆகாஷ் டேப்லெட், முன்பதிவு செய்யபட்டு பிறகு வழங்கப்பட்டது. இப்போது, ஆகாஷ் டேப்லெட்டின், அடுத்தக் கட்ட தயாரிப்பான, ஆகாஷ் - 4 வெளியிடப்பட உள்ளது. இதைத் தயாரித்து வெளியிட ஏசர், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டம் மற்றும் டெல் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 17 நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றன.



தற்போதைய நிலையில் கனடாவை சேர்ந்த, டெலிபோன் தயாரிப்பு நிறுவனமான, டாடாவின்ட், ஒரு லட்சம் ஆகாஷ் 4 டேப்லெட்டுகளை, குறைந்த விலையில் தயாரித்து வழங்கியுள்ளது. அதன் சிஇஓ சனீத் சிங் துலி 'ஆகாஷ்-4 டேப்லெட்டுகளை 2,500 ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரித்து வழங்குவது சவாலாக இருக்கிறது. அதே சமயத்தில் சிரமமாகவும் உள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close