Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் கிராமங்களில் கல்வி தரம்!

இந்தியாவில் கிராமங்களில் பனம் கட்டி படிக்கும் டியூசன்களின் விகிதம் நாளுக்கு நால் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர், இந்த டியூசன்களை நாடுவதாக ஆண்டு கல்வியறிக்கை கூறியுள்ளது.

குறிப்பாக அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் (6- 8ம் வகுப்பு) 2011ல் 27.2 சதவிகிதமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2013ல் 27.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவர்களில் 2011ல் 22.1 சதவிகிதம் மாணவர்களும், 2013ல் 21.5 சதவிகிதம் மாணவர்களும் டியூசன்களை நாடியுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ