Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டு பயன்பாடு: ஆர்.பி.ஐ. அதிரடி

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்.பி.ஐ) 2005க்கு முன் அச்சடிக்கபட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31க்கு பிறகு பொது பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல், ஆண்டு அச்சடிக்கபட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் மட்டுமே  பொது பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 2006க்கு பிறகு அச்சடிக்கபட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.

2005 க்கு முன் அச்சடிக்கபட்ட நோட்டுகளில் இந்த குறிப்பு இருக்காது. அதே நேரத்தில் ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பரிவர்த்தனைக்கு உகந்த ரூபாயாக மாற்றிக்கொள்ளாலாம்.

ஜூலை 1 ம் தேதிக்கு பிறகு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 10 க்கு மேல் மாற்றுவதற்கு கொண்டு சென்றால் கட்டாயமாக அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.

10 ரூபாய் முதல் 1000 ரூபாய் நோட்டுகள் வரை இந்த உத்தரவு பொருந்தும். இந்த மாற்றம் மூலம்  கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்று கருத்தும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆண்டு குறிப்பிடாத ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று புரளி கிளம்பலாம். ரூபாய் நோட்டுகள் செல்லும், ஆனால் பொது பரிவர்த்தனை செய்யாமல் அதை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள்லாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ