Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகரிக்கும் மின் பற்றக்குறை!

மத்திய மின் ஆணையம் (சிஇஏ) வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை டிசம்பர் மாதம் 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்திருக்கிறது. மின்சாரம் மொத்த பற்றாக் குறையின் அளவு 5,547 மெகாவாட். கடந்த டிசம்பர் மாதம் மின்சார உற்பத்தி 1,27,239 மெகாவாட். ஆனால் தேவையாக இருந்தது 1,32,786 மெகாவாட் ஆகும். அதனால் அந்த மாதத்தில் மின் தட்டுப்பாடு 3.7 சதவிகிதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் சிஇஏ தெரிவித்துள்ளது. மேலும் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதைப் பூர்த்திச் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து போனதும், நீர்மின் நிலையங்களும்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளது. வட மாநிலங்களில் அதிகக் குளிர் காரணமாகவும் தேவை அதிகரித்து உற்பத்தி குறைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
 
மேலும் அந்த அறிக்கையில், வட மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களில் பற்றாக்குறை அளவு 7.1 சதவீதமாக இருந்தது. இப்பகுதியில் பற்றாக்குறை அளவு 2,912 மெகாவாட்டாக இருந்தது. தேவையான மின்சாரம் 40,812 மெகாவாட்டாகும். ஆனால் உற்பத்தியானதோ 37,900 மெகாவாட்டாகும்.  தென் மாநிலங்களில் கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறை 3.7 சதவீதம், அதாவது பற்றாக்குறை 1,275 மெகாவாட். மின் தேவை 34,816 மெகாவாட்.
வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம் ஆகியவற்றில் பற்றாக்குறை 5.9 சதவீத அளவுக்கு இருந்தது. தேவை 2,009 மெகாவாட்டாக இருந்த போதிலும் உற்பத்தியானதோ 1,890 மெகாவாட் மட்டுமே. மேற்கு வங்காளம், ஒடிசா, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் மின் தேவை டிசம்பர் மாதம் 13,814 மெகாவாட். ஆனால் உற்பத்தியானதோ வெறும் 13,604 மெகாவாட் மட்டுமே. நாட்டின் மேற்கே குறிப்பாகச் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் மின் பற்றாக்குறை 2.5 சதவிகித அளவுக்கு இருந்தது. இப்பகுதியில் தட்டுப்பாடு 1,031 மெகாவாட்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ