Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உற்பத்தி குறையும் !

நடப்பாண்டில் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் மஞ்சள் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. சந்தை அறிக்கையின் படி, நடப்பாண்டில் மொத்த உற்பத்தி 52 லட்சம் பைகளாக இருக்கும். இதே கடந்தாண்டு இதேகாலத்தில் 70 லட்சம் பைகளாக இருந்தது.
மேலும் டிசம்பருக்கு முன்னர் மஞ்சள் இருப்பு 27&28 லட்சம் பைகளாக குறைந்துள்ளது என்றும், கடந்த ஆண்டு இதேகாலத்தில் 42 லட்சம் பைகளாக இருந்தது என்றும் தெரிகிறது. வரும் நாட்களில் நிஜாமாபாத் ஸ்பாட் சந்தைக்கு புதிய பயிர் வரத்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் வாரத்தில் உள்நாட்டு வியாபாரிகளிடம் தேவை அதிகரித்திருப்பதும், புதிய பயிர் வரத்து குறைந்துள்ளதும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ