Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கூட்டம் நாளை நடைபெறுவதையடுத்து, அந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்ற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இதையடுத்து இன்று  27-01-2014 இந்திய பங்கு சந்தைகல் படும் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து, 20,733 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 122 புள்ளிகள் சரிந்து 6,143 ஆக உள்ளது.
இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு 63.14 ரூபாயாக சரிந்துள்ளது. குறிப்பாக  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்கு விலை 4 சதவிகிதம் குறைந்தும், கோல் இந்தியா, சேசா ஸ்டெர்க்லைட் மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்குகளின் விலை தலா 3 சதவிகிதம் குறைந்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close