Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்...

பங்குச் சந்தையில் நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

இந்த ஜனவரி மாதத்தை 'டிவிடெண்ட் காலம்’ என்று சொல்லலாம். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்டை அறிவித்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், நிதிச் சம்பந்தமான இதழ்களிலும் 'டிவிடெண்ட் யீல்டு’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

அண்மை ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்றஇறக்கத்தைக் கண்டுள்ளது. பங்கின் விலைப் பெரிதாக உயர்ந்து லாபம் தரவில்லை என்றாலும், பல நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்குவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.

தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் தந்துகொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, பங்கின் விலை உயர்வு மூலம் கிடைக்கும் லாபம். அடுத்தது, வரி இல்லா டிவிடெண்ட் வருமானம். அந்தவகையில் பங்குச் சந்தையில் ஓரளவுக்கு நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

அதற்குமுன், பங்குச் சந்தை புதிய முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் குறித்துப் பலவித சந்தேகங்கள் இருக்கலாம். அந்தச் சந்தேகங்களை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்.

மூன்று வகை..!

ஒரு நிறுவனம் ஈட்டும் லாபத்தை மூன்று வகைகளில் உபயோகப்படுத்தும்.

1. லாபம் அனைத்தையும் தான் செய்யும் தொழிலின் விரிவாக்கப் பணிகளுக்கோ அல்லது கடனைக் குறைப்பதற்கோ அல்லது வேறு நிறுவனங்களை கையகப்படுத்து வதற்கோ உபயோகிக்கலாம்.

2. லாபத்தின் ஒரு பகுதியை டிவிடெண்டாகப் பங்குதாரர்களுக்கு வழங்கலாம்.

3. அல்லது மேலே கூறிய இரண்டையும் செய்யலாம்.

டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனம், தான் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதியை மொத்தப் பங்குதாரர்களுக்குப் பணமாகப் பிரித்து வழங்குவது.

செபியின் அறிவுறுத்தல்..!

பொதுவாக, இந்த டிவிடெண்ட் தொகையை இத்தனை சதவிகிதம் என்று அறிவிப்பார்கள். ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் தொகை என்பது பங்கின் முக மதிப்புக்கு வழங்கப்படுவதாகும். இங்கேயும் பலவிதக் குழப்பங்கள்; ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு முக மதிப்பில் பங்குகளை வைத்திருக்கின்றன. மேலும், சில நிறுவனங்கள் பங்குகள் மீதான வர்த்தகம் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து முக மதிப்பைக் குறைத்துவரும் அல்லது பங்கைப் பிரிக்கும் (Stock Split) வேலைகளில் ஈடுபடுகின்றன. எனவே, தற்போது நிறுவனங்கள் ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் எவ்வளவு (Dividend Per Share)  என்று தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தி உள்ளதுமேலும்

மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close