Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட்போன் விற்பனை 100கோடியை தொட்டுள்ளது.

உலக அளவில், கடந்த 2013ல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 100 கோடியை தாண்டியுள்ளன. இதுவே 2012&வுடன்  ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 38.4 சதவிகிதம் அதிகமாகும். மேலும் 2012ல் உலக செல்போன் விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் பங்கு 40 சதவிகித அளவிற்கு இருந்தது. 2013-ல் இவ்வகை போன்களில் பங்கு 55.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தற்போது ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.
ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒரு சதவிகிதம் உயர்ந்து 31.3 சதவிகிதமாக அதிகரித்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 15.3 சதவிகித்திலிருந்து (2012) 18.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
 
ஹூவாவே டெக்னாலஜிஸ் நிறுவனம் 4.9 சதவிகிதம் விற்பனை செய்து மூன்றாவது இடத்திலும், எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் 4.8 சதவிகித விற்பனையுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. லினோவா நிறுவனம் 4.5 சதவிகித விற்பனையுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் உலகில் மொத்தம் 175 கோடி ஸ்மார்ட்போன்கள் புழக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆய்வு நிறுவனமான ஐ.டீ.சி தகவல்களை வெளியிட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ