Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்னிய நிறுவன முதலீடுகள் அதிகரிப்பு!

இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வரும் இந்த சமயத்தில் அன்னிய நிறுவன மூதலீட்டாளர் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இரும்பு துறை சார்ந்த பங்குகளில் கடந்த காலாண்டை விட முதலீடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக டாடா ஸ்டீல் நிறுவன பங்கினை அன்னிய நிறுவன முதலீடு டிசம்பர்2013ல் 16.10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர்- ஜீன் மாதத்தில் முறையே 13.56 சதவிகிதம் மற்றும் 13.20 சதவிகிதமாக இருந்தது. ஜெ.எஸ்.டபள்யூ ஸ்டீல் நிறுவன பங்கின் கையிருப்பு 18.55 சதவிகிதமாக இருந்தது. இது முறையே செப்டம்பர்- ஜீன் மாதங்களில் 17.15 மற்றும் 17.99 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ